தமிழகத்தில் 768 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் சென்னை மாவட்டத்தில் ₹1,003.97 கோடி செலவில் கட்டப்பட்ட 643 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கரூர் மாவட்டத்தில் ₹17.56 கோடி செலவில் கட்டப்பட்ட 125 அடுக்குமாடிக் குடியிருப்புகள் என மொத்தம் 768 குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.