
தமிழ்நாடு மின் நிறுவல் பொறியாளர் சங்கம் (TNEIEA) சார்பில் நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கில் JCD பிரபாகர் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய JCD பிரபாகர், மின்சார பாதுகாப்பு, தரமான மின் கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
மின்சார நிறுவல் மற்றும் பொறியியல் துறையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மின் நிறுவல் பொறியாளர்களின் சேவையையும் அவர் பாராட்டினார்.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்றும், பாதுகாப்பான மற்றும் தரமான மின் கட்டமைப்பை உருவாக்குவதில் அவர்களின் பங்கு முக்கியமானது என்றும் வலியுறுத்தப்பட்டது.