
உலக சதுரங்க நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவின் மூலம் சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருவதாக அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், உலக சதுரங்க அரங்கில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வளர்ந்து வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்கத்தில் திறமையை வளர்த்துக் கொண்டு சர்வதேச போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் மாநில அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.