Skip to main content

Tamilaga Vettri Kazhagam

காமன்வெல்த் விளையாட்டு 2026 ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து ₹30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதலமைச்சர் விஜய்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

ராஜா முத்துப்பாண்டியின் இந்தச் சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ₹30 லட்சம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

மேலும், ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி, விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்றும், அவர் எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

#cmvijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்