
வியாசர்பாடியில் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (15.10.2026), பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வியாசர்பாடியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைநீர் தடையின்றிச் செல்லும் வகையில், மிதவை தூர்வாரும் இயந்திரங்களைக் கொண்டு கால்வாயில் உள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.