
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.08.2026) சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” (INDIA TODAY – ROUNDTABLE TAMIL NADU) மாநாட்டில், இந்தியா டுடே தமிழ் சேனலைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவரும், செயல் தலைமை ஆசிரியருமான திருமதி கல்லி பூரி மற்றும் நிர்வாகிகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் செய்தி மற்றும் ஊடகத் துறையில் புதிய முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்தியா டுடே தமிழ் சேனல், தமிழ் மக்களுக்கு முக்கியமான செய்திகளையும், தமிழ்நாடு தொடர்பான நிகழ்வுகளையும் தமிழில் வழங்கும் வகையில் செயல்பட உள்ளது.