Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் முன்னிலையில் Guidance Tamil Nadu மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் காட்சி.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், இன்று (30.07.2026) சென்னையிலுள்ள தமிழ்நாடு தொழில் வழிகாட்டி (Guidance Tamil Nadu) நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb), ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex), மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (The University of Western Australia) மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த மோட்டிவ்லிங்க் (MotiveLink) ஆகிய நிறுவனங்களுக்குமிடையே பல்வேறு துறைகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்