Skip to main content

Tamilaga Vettri Kazhagam

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். பயனாளிகள் எரிவாயு சிலிண்டரைப் பெற்ற பிறகு, அதற்கான தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

சுமார் 1.30 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயக் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பங்கள் உள்ளிட்டோர் பயனடைய உள்ளனர்.

இத்திட்டம் 2027 ஜனவரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.4,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்