
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.08.2026) சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” (INDIA TODAY – ROUNDTABLE TAMIL NADU) மாநாட்டைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், முதலீடு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடும் வகையில் இந்த வட்டமேசை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்று தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.