Skip to main content

Tamilaga Vettri Kazhagam

“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையிலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற நோக்கத்திற்கான மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் “போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்” தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரமும் தொடங்கி வைக்கப்பட்டது.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்