
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள் வழங்கும் விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறந்த சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்ற மருத்துவர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த அமைச்சர் டாக்டர் அருண்ராஜ், மக்களின் உயிரையும் நலனையும் பாதுகாக்கும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பான சேவையை தமிழ்நாடு அரசு உயர்வாக மதிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, மருத்துவர்களின் நலன் மற்றும் மருத்துவத் துறையின் மேம்பாட்டில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் சார்பில் அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அவர்களுக்கு மருத்துவர் பதிவுக்கான புதுப்பித்தல் (Registration Renewal) சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் மரு. தரேஸ் அகமது, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் மரு. ஏ. முருகநாதன், பதிவாளர் மரு. ஏ. செந்தில் வடிவு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தற்காலிக குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.