
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் அமைப்பாளர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் டாக்டர் கே. ராமசாமி அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஏ.பி. கருப்பையா, துணை அமைப்பாளர்கள் திரு. சி. யோகநாதன் மற்றும் திரு. பாலசிவபிரசாத், தலைமை செயல் அலுவலர் திரு. எம். சஞ்சீவி, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் திரு. டி.ஆர். அம்மையராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், வேளாண் உற்பத்தித் திறனை உயர்த்துதல், இயற்கை விவசாய முறைகளை விரிவுபடுத்துதல் மற்றும் வேளாண் துறையின் நீடித்த வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.