
சென்னை பத்திரிகையாளர் மன்றம் (CPC) நடத்திய இரண்டாமாண்டு ‘CPC Cricket League 2026’ கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொடரில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள், ஜனநாயகத்தில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் அரசு மக்களின் நம்பிக்கையைப் பெறும் என்றும், அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புச் செய்தது முதல், ஊடகங்களின் நியாயமான கேள்விகளுக்குச் செவிசாய்ப்பது வரை வெளிப்படையான நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.