
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளரான திரு. லயோலா மணி அவர்கள், கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மக்களின் நாயகன் தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் ஆலோசனையின்படியும், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் ராஜ் மோகன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அலுவலக வளாகத்தை சுத்தப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதே தனது முதல் பணியாக தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், முன்பு பணியாற்றியவர்கள் குறித்து குறை கூற விரும்பவில்லை என்றும், பல ஆண்டுகளாக மோசமான நிலையில் இருந்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் அனைத்து சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்து அலுவலகம் முழுமையாக ஒழுங்குபடுத்தப்படும் என்றும், தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.